குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மிதுனம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மிதுனம்

கனவுகளை நனவாக்க விரைந்து செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி குருவுடன் சூரியன் இணைந்திருப்பது ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தை பார்ப்பது எதிர்பாராத தன வரவும். நீண்டநாள் வராத பணமும் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். லாபாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து விரைய ஸ்தனாத்தை பார்வை இடுவதால் சில நேரம் எதிர்பாராத சிறு தடைகள் வந்து உடனே மறையும். சுக ஸ்தானத்தில் கேது அமர்வது.. சில நேரம் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டி வரும். 
 
உங்களின் ராசிநாதன் பார்வை கேது மீது படுவதால் தொழிலாளர்களின் பலம் அதிகரிக்கும். வேலை செய்யுமிடத்தில் உங்களின் வேண்டுதல்களை பரிசீலனை செய்ய வேண்டி வரும். அமைதியான சூழ்நிலைகளை அதிகம் விரும்புவீர்கள். இதற்காக சில அமைதியான இடம் தேடி செல்வீர்கள். கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகளும், பழைய தடைபட்ட விடயங்களும் விரைவில் வளம் பெறும். 
 
புதிய திட்டங்கள் செயல்படுத்தி தேவையான விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மனித நேயமுள்ள பல காரியங்களை செய்து வளம் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். கவலைகளை மறந்து சுதந்திரமாக இருந்து செயல்படுவீர்கள். 
 
கடந்த கால நிகழ்வுகளை மறக்க நினைத்து செயல்படுவீர்கள். துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான சில உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நல்ல வலிமையைத் தரும். சிறு சிவந்த கொப்புளங்கள் வந்து மனவருத்தத்தைத் தரும். சில நாட்களில் அதுவேதானே மறைந்துவிடும். பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். எளிதில் உங்களுக்கு பணிகள் அடையும்.

பரிகாரம்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில், வராகியம்மன் மற்றும் காளி வழிபாடு செய்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வர, சகல காரியமும் நன்மையும், வெற்றியும் தரும்.